“தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல்…” : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

“தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல்…” : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

புதுச்சேரி பேரவை தேர்தலில் வேட்பாளர் செலவு கணக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சமாக உயர்த்தப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

“தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல்…” : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக – பாஜக போன்ற கட்சிகள், ஏப்ரல் 14க்கு முன் தேர்தலை நடத்த கோரிக்கை வைத்தன. இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு புதுச்சேரி சென்றது.

“தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல்…” : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ” தமிழகம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடத்த அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிக அளவில் மக்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தில் நடைபெறும் தேர்தல் என்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தலைமை தேர்தல் ஆணையம் தலையிடாது. அதேபோல் புதுச்சேரி பேரவை தேர்தலில் வேட்பாளர் செலவு கணக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சமாக உயர்த்தப்படுகிறது” என்றார்.