திருச்சி கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த வேட்பாளர் போட்டி

 

திருச்சி கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த வேட்பாளர் போட்டி

திருச்சி

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெற்றிபெற்ற தொகுதியில் போட்டியிட திருச்சி மாவட்ட ஆவின் சேர்மன் ஆர்வம் காட்டி வருவது, அதிமுக வேட்பாளர் போட்டியை சூடுபிடிக்க வைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற வெல்லமண்டி நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சராகவும், மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அதிமுக மாநகர் மாவட்ட மாணவர் அணிச்

திருச்சி கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த வேட்பாளர் போட்டி

செயலாளரும், ஆவின் சேர்மனும் ஆகிய மலைக்கோட்டை கார்த்திகேயன், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அன்றாடம் பொதுமக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். கிறிஸ்தவர்களின் வாக்குவங்கி அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் நேற்று கார்த்திகேயன், உலக மீட்பர் சகாய மாதா திருத்தல பேராலயத்தின் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு அவர் சிறுபான்மையினரின் வாக்குகளை சேகரிக்க சென்றாரோ என்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.