‘ரூ.16 கோடியில்’ கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு!

 

‘ரூ.16 கோடியில்’ கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு!

தூத்துக்குடியில் ரூ. 16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டமாக சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்த முதல்வர், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்யவிருக்கிறார்.

‘ரூ.16 கோடியில்’ கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு!

அம்மாவட்டத்தில் ரூ.16 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையம், முதல்வர் வருகையின் போது திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, தற்போது அந்த புற்று நோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி காணொளி வாயிலாக திறந்து வைத்த பின்னர் நேரில் சென்று பார்வையிட்டார். அதே போல, ரூ.71.61 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மைய ஆய்வகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தவிருக்கும் முதல்வர், ரூ.328 கோடி மதிப்பில் 29 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 22 கோடியில் முடிவடைந்த பணிகளையும் முதல்வர் துவக்கி வைத்தார்.