“ஆம்பளைங்கள காப்பாத்த முடியாதாம்”-புற்று நோய் ஆபத்தில் சென்னை ஆண்கள்

 

“ஆம்பளைங்கள காப்பாத்த முடியாதாம்”-புற்று நோய் ஆபத்தில் சென்னை ஆண்கள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் ,பெங்களூருவில் உள்ள தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையமும் டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை ஆண்களுக்கு புற்று நோய் தாக்கும் ஆபத்துள்ளதாக சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது .

“ஆம்பளைங்கள காப்பாத்த முடியாதாம்”-புற்று நோய் ஆபத்தில் சென்னை ஆண்கள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கைப்படி இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் இருக்கும் ஆண்களும் ,பெண்களும் புற்று நோய் பாதிப்பின் விளிம்பிலிருப்பதாக கூறியுள்ளது .அதன்படி ,சென்னையில் எட்டில் ஒரு ஆண் அந்த ஆபத்திலிருப்பதாகவும் ,ஏழில் ஒரு பெண் இந்த புற்று நோய் ஆபத்திலிருப்பதாகவும் கூறியுள்ளது .
மேலும் ஹைதராபாத் ,பெங்களூரு ,மும்பை ,கொல்கத்தா ,திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் வாழும் ஆண்களை விட சென்னை ஆண்களை புற்று நோய் தாக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது .
பெண்களை பொறுத்தவரை இதே போல முன்பு சொன்ன அந்த நகர பெண்களை விட சென்னை பெண்களுக்கும் அதிக ஆபத்திலிருப்பதாக அது கூறியுள்ளது .மேலும் இது பற்றி ஒரு புற்று நோய் நிபுனர் கூறுகையில் ,ஆண்கள் மது மற்றும் புகை பழக்கத்தால் கேன்சரை தாங்களே வரவைத்துக்கொள்வதாகவும் ,ஆனால் பெண்கள் அப்படியில்லை என்றும் ,அதனால் சென்னை ஆண்கள் உடனே மது மற்றும் புகை பழக்கத்தை நிறுத்திவிட்டால் இந்த புற்றுநோய்களிலிருந்து தப்பிக்கலாமென்றும் ,மேலும் ஆண்கள் நோய் முற்றிய பிறகு கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவதால் அவர்களை காப்பாற்ற முடிவதில்லையென்று கூறினார் .மேலும் ஆண்களுக்கு குடல் புற்று, வாய் புற்று மற்றும் நுரையீரல் புற்று நோய்கள் அதிகம் தாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆம்பளைங்கள காப்பாத்த முடியாதாம்”-புற்று நோய் ஆபத்தில் சென்னை ஆண்கள்