ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு தொகையை இந்த இடங்களில் திரும்ப பெறலாம்!

 

ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு தொகையை இந்த இடங்களில் திரும்ப பெறலாம்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ரயில்களில் அதிகமாக பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது.

ரத்தான ரயில்களுக்கான முன்பதிவு தொகையை இந்த இடங்களில் திரும்ப பெறலாம்!

அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 12ம் தேதி வரை பயணிகள், விரைவு மற்றும் புறநகர் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட விருப்பதாகவும், ஜூலை 1ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 12ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டு, கட்டணங்கள் திருப்பி அளிக்கப்பட விருப்பதாகவும் ரயில்வே தெரிவித்தது.

இந்த நிலையில் ரயில்களுக்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன் பதிவு கட்டணத்தை மதுரை கோட்ட ரயில் நிலையங்களிலும், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, புனலூர், சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடத்தக்கது.