இனி ஹோட்டல்ல வாங்குற பார்சலுக்கு இது ரத்து? – அதிரடி உத்தரவு!

 

இனி ஹோட்டல்ல வாங்குற பார்சலுக்கு இது ரத்து? – அதிரடி உத்தரவு!

உணவகங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது தொடர்பாக சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு, தலப்பாகட்டி, ஆர்எஸ்எம், பிரசன்னம் மற்றும் சங்கீதா உணவு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இனி ஹோட்டல்ல வாங்குற பார்சலுக்கு இது ரத்து? – அதிரடி உத்தரவு!

அம்மனுவில், “உணவகங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவு, சேவை வரிக்கான வரம்புக்குள் உட்படாது. பார்சல் உணவு என்பது வணிகம் மட்டுமே. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து, குளிர்சாதனம் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி உணவு உட்கொள்ளும்போது மட்டுமே சேவை வரி பொருந்தும். ஆனால் உணவகங்களிலிருந்து பார்சலாக எடுத்துச் செல்லப்படும் உணவு வகைகளுக்கு சேவை வரி வசூலிப்பது என்பது சட்டவிரோதமானது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இனி ஹோட்டல்ல வாங்குற பார்சலுக்கு இது ரத்து? – அதிரடி உத்தரவு!

இந்த வழக்கு விசாரணை, நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “உணவகங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுகளுக்கு சட்ட ரீதியாக சேவை வரி விதிக்க முடியாது. அவ்வாறு வசூலிக்கவும் முடியாது. எனவே, இது தொடர்பாக உணவகங்களுக்கு சரக்கு சேவை வரித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் ரத்து செய்யப்படுன்றன” என்று உத்தரவிட்டார்.