நீட் தேர்வு ரத்தே நீட் தற்கொலைகளுக்குத் தீர்வு!- அன்புமணி ராமதாஸ்

 

நீட் தேர்வு ரத்தே நீட் தற்கொலைகளுக்குத் தீர்வு!- அன்புமணி ராமதாஸ்

நீட் காரணமாக நிகழும் தற்கொலைத் தவிர்க்க நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாக இருக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாணவி ஜோதிஶ்ரீ துர்கா நீட் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவியின் தற்கொலை செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நீட் தேர்வு ரத்தே நீட் தற்கொலைகளுக்குத் தீர்வு!- அன்புமணி ராமதாஸ்


நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள். மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெற தகுதியானவர்கள். நீட் தேர்வு காரணமாகவே அவர்களின் மருத்துவக் கனவு சிதைந்து போவதாக தற்கொலை முடிவை எடுக்கின்றனர். லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்து பயிற்சி பெற்றால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற

நீட் தேர்வு ரத்தே நீட் தற்கொலைகளுக்குத் தீர்வு!- அன்புமணி ராமதாஸ்

முடியும் என்ற நிலை உள்ளது. இது நடுத்தர குடும்பங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


மதுரை மாணவி தற்கொலை தொடர்பாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும். குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு!” என்று கூறியுள்ளார்.
இதே போல் தி.மு.க எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் “வாழ்நாளில் சந்திக்காத அளவுக்கு அழுத்தத்தில் இருக்கிறோம். மனித நேயமற்ற நீட் தேர்வு சமூக அநீதியை ஏற்படுத்தும். இது போன்ற கொடுமையை தடுக்க முடியாமல் அரசியலில் இருப்பதற்கே வெட்கமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வு ரத்தே நீட் தற்கொலைகளுக்குத் தீர்வு!- அன்புமணி ராமதாஸ்


தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக மாணவச் செல்வங்கள் நீட் தேர்வு பயம் மற்றும் மன அழுத்தம்

காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கதையாகி விட்ட நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இத்தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தமிழக அரசு வாய்மூடி மௌனியாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று கூறியுள்ளார்.