கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்தா?- என்ன சொல்கிறார் முதல்வர் பழனிசாமி

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்தா?- என்ன சொல்கிறார் முதல்வர் பழனிசாமி

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்தா?- என்ன சொல்கிறார் முதல்வர் பழனிசாமி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது என்று தெரிவித்தவர், இதில் தமிழக அரசு மட்டும் 6 ஆயிரம் கோடி ஒதுக்கி சுகாதார பணிளை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு உரிய பணத்தை திருப்பி வழங்கும் வகையில், கடன் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த முதல்வர் பழனிசாமி, ஆனால், நகைக் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கவில்லை என்றார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்தா?- என்ன சொல்கிறார் முதல்வர் பழனிசாமி

இதன் பின்னர் கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோனை வழங்கிய முதல்வர் பழனிசாமி, பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.