“முறைகேடாக பெற்ற வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்க”… கோவை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!

 

“முறைகேடாக பெற்ற வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்க”… கோவை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!

கோவை

கோவை மாவட்டம் காரமடையில் மோசடி செய்து பெறப்பட்ட வீட்டுமனைகளின் பட்டாக்களை ரத்து செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகரில், கோவை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 91 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும், இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்று உள்ளதாவும் தெரிவித்தனர்.மேலும், ஒரு சிலரது வீட்டுமனை பட்டாக்களை, வேறு நபர்களுக்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

“முறைகேடாக பெற்ற வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்க”… கோவை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!

இந்த முறைகேடு குறித்து கன்னார்பாளையம், கருப்பராயர் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து 10-வது வாரமாக ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளதாகவும், ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர்கள், தங்களது மனு மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.