கொரோனா பரவல் எதிரொலி: திருப்பதில் இலவச தரிசன டிக்கெட் ரத்து

 

கொரோனா பரவல் எதிரொலி: திருப்பதில் இலவச தரிசன டிக்கெட் ரத்து

திருப்பதியில் ஏப்ரல் 11ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெறும் அனைத்து பணிகளும் முடங்கின. அந்த வகையில் அலைமோதும் கூட்டம், கோவிந்தா கோஷம் என பரபரப்பாக இயங்கி வந்த திருப்பதி கொரோனாவால் சற்று ஆட்டம் கண்டது எனக்கூறலாம். கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விசேஷமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கூட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து. சற்று கொரோனா பரவல் தொடங்கியதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியிலிருந்து இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டது

கொரோனா பரவல் எதிரொலி: திருப்பதில் இலவச தரிசன டிக்கெட் ரத்து

இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், வரும் திங்கள்கிழமை முதல் இலவச தரிசனம் ரத்து. 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் முடிவடையும். நாளொன்றுக்கு ₹300 டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.