மக்களின் சிரமம் கருதி இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடிதம்

 

மக்களின் சிரமம் கருதி இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடிதம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த சில மாதங்களாக கடைபிடிக்க பட்டு வந்த இபாஸ் நடைமுறையும் நீடிக்கிறது. அதாவது பிற மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ செல்ல வேண்டும் என்றால் இபாஸ் பெற்றுக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருக்கிறது. ஆனால் அத்தியாவசிய தேவையாக்களுக்காக கூட இபாஸ் வழங்கப்படுவதில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மக்களுக்கு சிரமம் கொடுக்கும் இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்குமாறு திமுக கோரிக்கை வைத்தது. ஆனால் இப்போதைக்கு இபாஸ் முறை தகர்க்கப்படாது என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

மக்களின் சிரமம் கருதி இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடிதம்

இந்த நிலையில் இபாஸ் முறையை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மக்கள் படும் சிரமத்தை கருதி இபாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், அவசியமான நேரங்களில் கூட மக்களுக்கு இபாஸ் வழங்கப்படுவதில்லை என்றும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இபாஸ் முறை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.