நஷ்டத்தை கணக்கு காட்டிய பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி…

 

நஷ்டத்தை கணக்கு காட்டிய பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி…

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா 2020 மார்ச் காலாண்டில் ரூ.3,571.4 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் பேங்க் ஆப் இந்தியா ரூ.251.8 கோடி லாபம் சம்பாதித்து இருந்தது. 2020 மார்ச் காலாண்டில் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர வட்டி வருவாய் 6.2 சதவீதம் குறைந்து ரூ.3,793 கோடியாக குறைந்துள்ளது. இதே காலாண்டில் அந்த வங்கியின் மொத்த வாராக்கடன் 14.8 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

நஷ்டத்தை கணக்கு காட்டிய பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி…

பொதுத்துறையை சேர்ந்த கனரா வங்கிக்கு கடந்த மார்ச் காலாண்டில் ரூ.3,259.33 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2019 மார்ச் காலாண்டில் கனரா வங்கிக்கு ரூ.551.53 கோடி மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் கனரா வங்கியின் நிகர வட்டி வருவாய் 5.2 சதவீதம் குறைந்து ரூ.3,318.52 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த மார்ச் இறுதியில் கனரா வங்கியின் மொத்த வாராக்கடன் 8.21 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 4.22 சதவீதமாகவும் இருந்தது.

நஷ்டத்தை கணக்கு காட்டிய பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி…

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியது. சமானிய மக்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை இந்த லாக்டவுனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வங்கிகளுக்கு இந்த ஜூன் காலாண்டு பெரும் நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.