கேட்காமலேயே ஆதரவுக்கரம் நீட்டும் வெளிநாடுகள்… ரூ.60 கோடி நிதி அளிக்கும் கனடா!

 

கேட்காமலேயே ஆதரவுக்கரம் நீட்டும்   வெளிநாடுகள்… ரூ.60 கோடி நிதி அளிக்கும் கனடா!

கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் சிக்கி இந்தியா திணறி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இதனால் டெல்லியில் மட்டுமே கடந்த மூன்று நாட்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். தவிர ரெம்டெசிவிர் மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்திருக்கின்றன.

கேட்காமலேயே ஆதரவுக்கரம் நீட்டும்   வெளிநாடுகள்… ரூ.60 கோடி நிதி அளிக்கும் கனடா!

தற்போது கனடா நாடு 1 கோடி டாலர் நிதியுதவி அளிக்கவிருப்பதாகக் கூறியுள்ளது. இது இந்திய மதிப்பில் 60 கோடி ரூபாய். கனடாவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இந்த நிதியானது அனுப்பி வைக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர், ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பி வைப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.