“தாடி வளர்த்தால் கொரோனாவால் வரும் ஆபத்து; இன்றே கிளின் ஷேவ் செய்யுங்கள்” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

“தாடி வளர்த்தால் கொரோனாவால் வரும் ஆபத்து; இன்றே கிளின் ஷேவ் செய்யுங்கள்” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கொரோனா காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏராளமானோருக்கு புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியது. முக்கியமாக இளைஞர்கள் தாடி வளர்ப்பதற்கும், புதிய ஹேர்ஸ்டைலை முயற்சி செய்து பார்க்கவும் ஊரடங்கு பயன்பட்டது. நிறைய இளைஞர்கள் தினமும் கன்னத்தில், தாடையில் எண்ணெய் போட்டு தாடியை வளர்க்க பாடுபட்டனர் என்றே சொல்ல வேண்டும். மற்ற காலங்களில் எப்போதாவது செய்துகொண்டிருந்தனர். ஊரடங்கால் வீட்டிலேயே இருந்ததால் முறைப்படி அதனைக் கடைப்பிடித்தனர். இந்த கொரோனா காலத்தில் தாடி வளர்ப்பது ஆபத்தானதா?

“தாடி வளர்த்தால் கொரோனாவால் வரும் ஆபத்து; இன்றே கிளின் ஷேவ் செய்யுங்கள்” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இதுதொடர்பாக தோல் மருத்துவர் அந்தோனி ரோஸி கூறுகையில், “நீங்கள் புதர் போல தாடி வளர்த்தால் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். அவ்வாறு தாடி வைத்து நீங்கள் மாஸ்க் போடும் பட்சத்தில் மாஸ்க்கால் அனைத்து இடங்களையும் கவர் செய்ய முடியாது. இதனால் மாஸ்க் ஒழுங்கற்ற தன்மையுடன் இருக்கும். சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதன் வழியாக வைரஸ்களால் உள்ளே செல்ல முடியும். இது உங்களால் மற்றவருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

“தாடி வளர்த்தால் கொரோனாவால் வரும் ஆபத்து; இன்றே கிளின் ஷேவ் செய்யுங்கள்” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இப்போது நீங்கள் சுவாசிக்கும் போதோ, பேசும் போதோ, இருமும் போதோ உங்களிடமிருந்து வெளியேறும் வைரஸ் உங்கள் மாஸ்க்கை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதேபோல நீங்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தால் மாஸ்க்கை தாண்டி அந்த வைரஸ்கள் உங்களைத் தாக்கும். ஆகவே உங்களது தாடியை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலம் அப்படிப்பட்டது” என்றார்.

“தாடி வளர்த்தால் கொரோனாவால் வரும் ஆபத்து; இன்றே கிளின் ஷேவ் செய்யுங்கள்” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

எப்படி தாடியை ஒழுங்கமைக்கவும் அலங்கரிக்கவும் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

ஸ்டைல் தாடி

ஒரேயொரு ட்ரிம்மர் போதும் நீங்கள் சலூனே செல்ல தேவையில்லை. கிளின் ஷேவ் செய்ய வேண்டுமென்றாலும் உங்களுக்குத் தேவையான அளவில் துல்லியமாக தாடி வைப்பதற்கும் ட்ரிம்மர் பேருதவியாக இருக்கிறது. இணையத்தில் உங்கள் முக அமைப்பிற்குப் பொருத்தமான தாடி எது தேடிப் பாருங்கள். அதைப் போல தாடியை ட்ரிம் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு ஷேவ் செய்த பிறகு அந்த இடத்தில் தாடி எண்ணெய்யை (Beard Oil) தடவிக் கொள்ளுங்கள். அது உங்கள் தாடியை மென்மையாக்கும்.

“தாடி வளர்த்தால் கொரோனாவால் வரும் ஆபத்து; இன்றே கிளின் ஷேவ் செய்யுங்கள்” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

முகத்தை சுத்தமாக வைத்திருங்கள்

கோடைக்காலம் வேறு என்பதால் வழக்கத்திற்கு மாறாக வியர்வை சுரக்கும். இது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். வியர்வையுடன் அழுக்கு மற்றும் தூசி ஒட்டிக்கொண்டால் தோல் வெடிப்பு, பருக்கள் ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டுமென்றால் தினமும் இரு முறை முகத்தைக் கட்டாயம் கழுவுங்கள். facial cleanser போன்ற கருவிகளின் மூலமும் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

“தாடி வளர்த்தால் கொரோனாவால் வரும் ஆபத்து; இன்றே கிளின் ஷேவ் செய்யுங்கள்” – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தலைமுடி பராமரிப்பு

சலூன்கள் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே எப்படி ஹேர் ஸ்பா செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். முதலில் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து 20 நிமிடங்கள் காத்திருங்கள். அதற்குப் பிறகு ஒரு துண்டை சுடு தண்ணீரில் நனைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் தலையைச் சுற்றி மடியுங்கள். இதன்மூலம் ஏற்படும் நீராவி உங்கள் உச்சந்தலையில் ஆழமாக எண்ணெய் ஊடுருவ உதவுகிறது. அடுத்தபடியாக உங்கள் தலைமுடியை நல்ல தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் மூலம் கழுவ வேண்டும். அவ்வளவு தான் வேலை முடிந்தது.