darbar
  • January
    18
    Saturday

Main Area

Main



கியாஸ் சிலிண்டர் வாங்கறீங்களா... இனி இப்படி செக் பண்ணுங்க!

 சிலிண்டர்
சிலிண்டர்

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விலையில் வாங்கும் கியாஸ் சிலிண்டரை முழுமையாக நாம் பயன்படுத்துகிறோமா? இந்த கேள்வி பெரும்பாலான வீடுகளில் இல்லத்தரசிகளின் மனசில் எழுவது தான். நிறைய வீடுகளில் புது சிலிண்டர் வந்ததுமே அதைப் பயன்படுத்த துவங்கும் போது அன்றைய காலண்டர் தாளைக் கிழித்து ஒட்டியோ, சாக்பீஸால் பயன்படுத்த துவங்கும் தேதியை கிறுக்கி வைத்தோ எத்தனை நாட்களுக்கு சிலிண்டர் வருகிறது என்று கண்காணிக்கிறோம். ஆனால், எப்பவாவது உங்களுக்கு தரப்படுகிற சிலிண்டர் முழுதாக தான் தரப்படுகிறதா என்பதைச் சோதனை செய்து பார்த்திருக்கீங்களா?

gas cylinder

நிறைய இடங்களில், சமையல் எரிவாயு சிலிண்டரை வீடுகளுக்கு தருவதற்கு முன்பாக ஒரு வாரமோ, இரு வாரமோ கடைகளுக்கு கொடுத்து விட்டு, பாதி பயன்படுத்திய சிலிண்டரை தான் வீடுகளுக்கு சப்ளை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு தீர்வைத் தேடி தமிழகத்தின் கம்பம் பகுதிகளில் வாடிக்கையாளர்கள் களத்தில் இறங்கினார்கள். மாதந்தோறும் நடைப்பெறும் சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டத்தில் இப்படி முழுதாய் சிலிண்டர்கள் வருவதில்லை என்பதை புகாராக தெரிவித்து, இனி சிலிண்டர் விநியோகிக்கும் போது எடை இயந்திரத்துடன் விநியோகிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் திரு. கந்தசாமியிடம் கோரிக்கையை வைத்தனர். 

meeting

நுகர்வோர்கள் குரல் கொடுத்தால் பதில் கிடைக்கும் தானே?  வருவாய் அலுவலரின் உத்தரவின் பேரில் தற்போது, கம்பம் பகுதியில் உள்ள பொன்முத்து இன்டேன் ஏஜென்ஸி பனியாளர்கள் எடைஇயந்திரத்துடன் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகித்து வருகின்றனர். வீட்டிற்கு சிலிண்டர் வரும் போது, டெலிவரி செய்பவர்கள் உங்கள் கண் எதிரிலேயே சிலிண்டரின் எடையை காட்டுவார்கள். முழு எடையும் நிரப்பப்பட்டிருக்கிறதா என சோதித்து திருப்தியடைந்தால் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு இருந்தால் எடையில் வேறுபாடு இருக்கும்.   இதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்கவே சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் எடைபார்க்கும் இயந்திரத்தையும் கையோடு கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுக்கின்றன. உங்கள் டீலர்களிடமும் இதைக் கோரிக்கையாக வைத்து, உங்கள் சிலிண்டர் ஏற்கெனவே பயன்படுத்தப்படாதது தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்க!

2018 TopTamilNews. All rights reserved.