’ரோஹித் ஷர்மா பற்றி விராட் கோலி இப்படி சொல்லலாமா? ‘ மூத்த வீரர் அதிர்ச்சி

 

’ரோஹித் ஷர்மா பற்றி விராட் கோலி இப்படி சொல்லலாமா? ‘ மூத்த வீரர் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. தற்போது ஆடி வரும் வீரர்களில் உலகின் மிகச் சிறந்த வீரர்களில் கோலியும் ஒருவர் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவரின் கேப்டன்ஷிப் பற்றி அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்படுவது வழக்கமாகி விட்டது.

இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாகத் தோற்றது. சேஸிங்தான் என்று தெரிந்தும் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினார்கள். பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்பு இருப்பதுபோலவே ஆட வில்லை என்பதே சோகம்.

’ரோஹித் ஷர்மா பற்றி விராட் கோலி இப்படி சொல்லலாமா? ‘ மூத்த வீரர் அதிர்ச்சி

இந்நிலையில் ஒரு பேட்டியில், ‘ரோஹித் ஷர்மாவின் காயம் பற்றி எனக்குத் தெரியாது. அணி வீரர்கள் தேர்விலும் எனக்குச் சம்பந்தம் இல்லை’ என்பதாக விராட் கோலி கூறியிருக்கிறார். இந்தப் பதில் பல தரப்பிலிருந்தும் கோலிக்கு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஆஷிஷ் நெஹ்ரா, ‘ஒரு அணியின் கேப்டன், அதில் ஆடும் ஒரு வீரரின் உடல் காயம் பற்றி தெரியவில்லை என்பது சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு கேப்டன் எனும் முறையில் அதை விசாரித்திருக்க வேண்டும்’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

’ரோஹித் ஷர்மா பற்றி விராட் கோலி இப்படி சொல்லலாமா? ‘ மூத்த வீரர் அதிர்ச்சி

ஏற்கெனவே, ரோஹித் – கோலி மறைமுகச் சண்டைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கோலியின் பேச்சு அதில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறது.