சாலை விபத்துகள் நடப்பதால் சாலையை மூடிவிடமுடியுமா? கமல்ஹாசன்

 

சாலை விபத்துகள் நடப்பதால் சாலையை மூடிவிடமுடியுமா? கமல்ஹாசன்

ந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தார்கள். அந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். அப்போது கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும் சென்னை வடபழனி்யில் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இயக்குநர் ஷங்கர் பேசியபோது, ‘’என்னுடைய உதவியாளர் கிருஷ்ணா உள்ளிட்ட மூவரின் குடும்பத்திற்கு மீண்டும் என் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

கமல்ஹாசன் பேசியபோது, ‘’இனி இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறோம். அதன்படி படத்தின் இறுக்கட்ட பணிகள் நடைபெறும்’’என்று தெரிவித்தவரிம்,

ஈ.வி.பி. படப்பிடிப்பு நடந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. அங்கேதான் இந்தியன் -2 பட விபத்தும் நடந்துள்ளது. அதனால் அந்த இடம் குறித்து பலவாறு பேசப்படுகிறது. அங்கேதான் மீண்டும் ஷூட்டிங் நடத்தப்போகிறீர்களா? என்று கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘’அது பற்றி நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், அதே இடத்தில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டுமான் என்பதை எல்லாம் ஷங்கர் பார்த்துக்குவார்’’என்றார்.

கிரேன் விபத்தும் நடந்தும் மீண்டும் சினிமா படப்பிடிப்பு நடக்கிறதே? என்று எழுந்த கேள்விக்கு, ’’சாலை விபத்துகள் நடக்கிறது என்பதற்காக சாலையை மூடிவிட முடியுமா? அதுபோலத்தான் இதுவும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் விபத்து நிகழ்ந்தது. இனி அப்படி ஒரு சம்பவம் நடக்காதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’என்றார்.