கொத்தனாரும், சித்தாளுமா ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்? பாஜக கேள்வி

 

கொத்தனாரும்,  சித்தாளுமா  ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்? பாஜக கேள்வி

கொத்தனாரும், சித்தாளுமா ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்? என்று கேட்டு, அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏழை தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாக பா.ஜ.க அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் குற்றச்சாட்டு வைத்தார்.

கொத்தனாரும்,  சித்தாளுமா  ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்? பாஜக கேள்வி

தஞ்சையில் நடைபெற்ற பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் பாண்டித்துரை, ‘’டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர்க் காப்பிட்டுத் திட்டத்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் செய்தது அரசு அதிகாரியாக இருந்தாலும், ஆட்சியாளர்களாக இருந்தாலும், மாஃபியா கும்பலாக இருந்தாலும் சரி தண்டனை உறுதியாக கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

மேலும், ‘’மாநிலம் முழுவதிலும் தொழிலாளர் நலவாரியம் கடந்த 4 மாதமாக முடக்கப்பட்டுள்ளது. அது குறித்து துறை அதிகாரியிடம் கேட்டபோது,
தொழிலாளர் நலவாரிய பதிவை ஆன்லைனில் புதுப்பிக்க வேண்டும் என்றும் அதிலும் பிரச்னை இருப்பதால் தான் பதிவை புதுப்பிக்க முடியவில்லை என்று பதில் கூறுகிறார்கள்’’ என்று வேதனை தெரிவித்தார்.

கொத்தனாரும்,  சித்தாளுமா  ஆன்லைனில் புதுப்பிக்க முடியும்? பாஜக கேள்வி

கொத்தனாருக்கும், சித்தாளுக்கும் ஆன்லைனில் புதுப்பிக்க தெரியுமா ? என்று கேள்வி எழுப்பியவர், துறை அதிகாரிகள் 4 மாதமாக தொழிலாளர் நலவாரியத்தை முடக்கி வைத்துள்ளதால் ஏழை தொழிலாளர்களுக்கு உரிய பலன் கிடைக்காமல் அவர்கள் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.