காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? கடுப்பில் சிதம்பரம்

 

காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? கடுப்பில் சிதம்பரம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான சூழலில் திமுக இருந்துவருகிறது. இருப்பினும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட தொகுதி ஒதுக்காமல் திமுக கறார் காட்டியது பலரும் அறிந்த ஒன்றுதான் .கடந்த தேர்தலில் 40 சீட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் 25 சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .அதுவும் பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ,கேஎஸ் அழகிரி மேடையில் கண்ணீர் சிந்தி பெற்றது தான்.

காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? கடுப்பில் சிதம்பரம்

அதேபோல் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை தென் மாவட்டங்களில் களமிறக்கி பிரச்சாரம் செய்யும்போது இது குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன் இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததே என்ற தொணியில் கமென்ட் அடித்தது காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு இடையில் இணக்கமான சூழல் இல்லை என்ற நிலையை வெளிப்படையாக காட்டியது.

காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? கடுப்பில் சிதம்பரம்

இந்நிலையில் காரைக்குடியில் புதுவயல் காங்கிரஸ் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அங்கு கட்சி நிர்வாகிகள் பலர் கூட்டத்திற்கு வராத நிலையில் ப.சிதம்பரம் விரக்தியடைந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், ” கட்சி என்றால் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் . இல்லாவிடில் அடுத்த முறை 25 சீட் கூட கிடைக்காது. கூட்டத்துக்கு ஆட்கள் வராதது வேதனையாகவுள்ளது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை.
காங்கிரஸ் தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமைக் கட்சிகளை நம்பி தேர்தலை சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை . காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்து விடலாமா? கடுப்பில் சிதம்பரம்

முன்னதாக திமுக கூட்டணியில் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல் விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருதாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, திருவில்லிபுத்தூர், திருவாடனை , உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.