சூரிய கிரகணத்தால் கொரோனா வைரஸ் அழியுமா? – உண்மை என்ன?

 

சூரிய கிரகணத்தால் கொரோனா வைரஸ் அழியுமா? – உண்மை என்ன?

டெல்லி: சூரிய கிரகணத்தால் கொரோனா வைரஸ் அழியாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

2020-ஆம் ஆண்டு வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்தாண்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காணக் கூடிய 6 கிரகணங்கள் நிகழ உள்ளது. அதில் ஏற்கனவே இரண்டு சந்திர கிரகண நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. அவற்றில் ஒரு கிரகண நிகழ்வை இந்தியாவிலிருந்து பார்க்க முடிந்தது. ஜனவரி 10 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் ஏற்பட்டன. இதற்கிடையே இன்று இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் இந்த கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.

சூரிய கிரகணத்தால் கொரோனா வைரஸ் உலகில் அழிந்து விடும் என்று கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் சூரிய கிரகணத்தால் கொரோனா வைரஸ் அழியாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதை விஞ்ஞானி கே.எல்.சுந்தர் கிருஷ்ணாவும் உறுதி செய்துள்ளார். அதனால் சூரிய கிரகணத்தால் கொரோனா வைரஸ் அழிந்து இனி தொற்றுநோய் பரவாது என்று யாரும் கருதக் கூடாது. எனவே எப்போதும்போல பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.