பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா? எடப்பாடி பழனிசாமியிடம் ஐடியா கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

 

பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா? எடப்பாடி பழனிசாமியிடம் ஐடியா கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் மாநிலங்களிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா? எடப்பாடி பழனிசாமியிடம் ஐடியா கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பொது தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில் பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்துக் கேட்டிருந்தது . இதில் 60% பேர் தேர்வு நடத்தலாம் என்ற கருத்து கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார். இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை ,பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் ,விடுதலை சிறுத்தைகள் சார்பில் பாலாஜி உள்ளிட்ட 13 பேர் பங்கேற்க உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா? எடப்பாடி பழனிசாமியிடம் ஐடியா கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் பேசியுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் +2 தேர்வு தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்திருக்கிறார்.முன்னதாக எடப்பாடி பழனிசாமி மாணவர்கள் நலன் கருதி சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.