Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுக்கலாமா?

குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடவில்லை, சாப்பாடு என்றாலே அடம் பிடிக்கிறார்கள் என்று சொல்லும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு “அந்த பிஸ்கெட் என்றால் உயிர், இந்த பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள்” என்பதை சொல்லக் கேட்டிருக்கிறோம்.

குழந்தையில் இருந்தே இணை உணவாக பிஸ்கெட் கொடுத்து பழகினால் அந்த குழந்தைகள் உணவை எடுத்துக் கொள்ளாது என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். இதன் மூலம் பிள்ளையின் பசிபோகும் என நினைக்கிறார்கள். ஆனால், தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் டயட்டீசியன்கள்.

பிஸ்கட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகமாக சுத்திகரிக்கப்பட்டவை. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க
ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இரண்டு பிஸ்கெட்தானே என் நினைக்கு தாய்மார்கள் ஊட்டச்சத்து இல்லாத உணவை அளிக்கிறோம் என நினைத்துக் கொண்டால் நல்லது.

அ.ஷாலினி

மாவட்ட செய்திகள்

Most Popular

‘பாஜக – பாமக இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம்’ – திருமாவளவன் திட்டவட்டம்!

பாமக - பாஜக இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என்று எம்.பி. திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனியார்...

“ஸ்டாலின் கொரோனா; உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா” – வைகைச்செல்வன் கடும் தாக்கு!

ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமல் ஹாசனுக்கு விழாது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

திமுக ‘அது’க்கு ஓக்கேன்னா பாமக ‘இது’க்கு ஓ.கே.தான்…. ஜி.கே. மணி

கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வர திமுக முயற்சித்து வருகிறது என்ற பேச்சு இருக்கும்நிலையில், பாமகதான் இன்னமும் பதில் சொல்லாமல் இருக்கிறது என்ற பேச்சு எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, திமுகவின்...

கல்லூரி மாணவர்களிடம் கத்திமுனையில் செல்போன், பணம் பறிப்பு : சென்னையில் பரபரப்பு!

சென்னை கோடம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம்...
Do NOT follow this link or you will be banned from the site!