ஃபாஸ்ட் சார்ஜரை எல்லா ஸ்மார்ட் மொபைல்களுக்கும் பயன்படுத்தலாமா?

 

ஃபாஸ்ட் சார்ஜரை எல்லா ஸ்மார்ட் மொபைல்களுக்கும் பயன்படுத்தலாமா?

இப்போதெல்லாம் யாராவது ஒருவர் வீட்டுக்கு வந்தால், வந்தவுடனே அவர் கேட்பது சார்ஜரைத்தான் அல்லது சார்ஜர் போடுவதற்கு ப்ளக் பாயிண்ட் எங்கே என்றுதான். அந்தளவுக்கு மொபைலின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

காலையில் எழுந்ததும் மொபைலின் முகத்தில் கண் விழிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். அநேகமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். அதேபோல இரவு நீண்ட நேரம் மொபைலில் வீடியோ பார்ப்பது, சாட் செய்வது என மொபைலைப் பயன்படுத்துவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

ஃபாஸ்ட் சார்ஜரை எல்லா ஸ்மார்ட் மொபைல்களுக்கும் பயன்படுத்தலாமா?

ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்துபவர்களில் 80 சதவிகிதம் மொபைல் வழியாகத்தான் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். செய்திகள் பார்ப்பது, மெயில் அனுப்புவது, சோஷியல் மீடியாவில் இயங்குவது என மொபைலின் வழியேத்தான் அதிக செயல்பாடுகள் நடக்கின்றன.

மொபைலில் அதிக வசதிகள் வருவதால் சீக்கிரமே சார்ஜ் தீர்ந்துபோகிறது. எனவே பவர் மொபைலை விடவும் பெரிய சைஸில் பவர் பேங்க் பலர் வைத்திருக்கிறார்கள்.

ஒரு மொபைலுக்கு சார்ஜர் ஏற குறைந்தது 30 – 40 நிமிடங்கள் ஆகிறது. ஆனால், சில நிமிடங்களில் சார்ஜ் ஏறும் ஃபாஸ்ட் சார்ஜர்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அதனால் பலர் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

ஃபாஸ்ட் சார்ஜரை எல்லா ஸ்மார்ட் மொபைல்களுக்கும் பயன்படுத்தலாமா?

எந்த ஸ்மார்ட் போனுக்கும் ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்த முடியும் எனச் சிலர் நினைக்கிறார்கள். அதனால், தங்கள் போனை ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் போடுகிறார்கள். இது சரிதானா என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ஸ்மார்ட் போனுக்கும் மின்சாரம் ஏற்றுவதைத் தாங்கும் ஓர் அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். உதாரணமாக, 10 W அளவுதான் தாங்கும் என்று இருக்கும் ஒரு ஸ்மார்ட் போனில், 20 W சார்ஜர் மூலம் சார்ஜர் ஏற்றினால் பேட்டரி பாதிக்கப்படும்.

ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தும் விதத்தில் மொபைலில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், சார்ஜரிலிருந்து பெறப்படும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்பட்டு அது மொபைல் இயங்க பயன்படுகிறது. எனவே, ஒரு மொபைலுக்கு எந்தளவில் மின்சாரம் பெற வேண்டும் என மொபைல் தயாரிப்பின்போதே முடிவு செய்யப்படுகிறது.

ஃபாஸ்ட் சார்ஜரை எல்லா ஸ்மார்ட் மொபைல்களுக்கும் பயன்படுத்தலாமா?

எனவே, எந்தவொரு மொபைலுக்கு அந்நிறுவனம் பரிந்துரை செய்யப்படும் வகையான சார்ஜரைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும். அப்போதே மொபைலின் பேட்டரி எவ்வித பாதிப்பும் இல்லாத அளவு சீராக இருக்கும். அதைத் தவிர்த்து ஃபாஸ்ட் சார்ஜர் ஏற்றுக்கொள்ளாத மொபைலுக்கு அதைப் பயன்படுத்துவது தவறானது. ரொம்பவே தவிர்க்க முடியாத நேரத்தில் சாதாரண மொபைக்கு ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தலாமே தவிர, ரெகுலராகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இப்போது சமீபத்தில் ரியல் மீ நிறுவனம்கூட ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்தப் புதிய ஃபாஸ்ட் சார்ஜரில் 13 நிமிடங்களில் மொபைலின் 100 சதவிகித சார்ஜர் ஏறிவிடும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

ஃபாஸ்ட் சார்ஜரை எல்லா ஸ்மார்ட் மொபைல்களுக்கும் பயன்படுத்தலாமா?

புதிய மொபைல் வாங்கும்போதே அது, ஃபாஸ்ட் சார்ஜரைத் தாங்கும் வசதி உள்ளதா என்று செக் பண்ண மறக்க வேண்டாம். கவனிக்க மறந்திருந்தாலும் உங்கள் மொபைல் மாடலை வைத்து ஆன்லைனில் அதில் ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்த முடியுமா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

அதேபோல, நீண்ட நேரம் மொபைலை சார்ஜர் போட்டு வைத்துவிடும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது. மொபைலில் 100 சதவிகிதம் சார்ஜர் ஏறியதும், சார்ஜரை அகற்றி விடுவதே நல்லது.