12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? இன்று முக்கிய ஆலோசனை!

 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? இன்று முக்கிய ஆலோசனை!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்தலாம் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் கொரோனாவை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்தல் முடிந்ததும் மே 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் குறையாத நிலையில் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெற்றதுடன் பொதுத்தேர்வு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? இன்று முக்கிய ஆலோசனை!

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி எப்போது அறிவிப்பது என்பது தொடர்பாக இன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் 10:30 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் , தேர்வுகள் துறை இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் பங்கேற்கின்றனர்.