மும்பையை மீண்டும் வெல்ல முடியுமா சென்னையால்? – #ipl #MIvsCSK

 

மும்பையை மீண்டும் வெல்ல முடியுமா சென்னையால்? – #ipl #MIvsCSK

இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டி மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குமாக இருந்தது. அந்தப் போட்டி, பலம் வாய்ந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி, ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும். யாருக்கு வெற்றி கிடைத்தாலும் போராடியே பெற வேண்டும் என்பதாகக் கணிக்கப்பட்டது.

மும்பையை மீண்டும் வெல்ல முடியுமா சென்னையால்? – #ipl #MIvsCSK

அந்தப் போட்டியில் சென்னையே வென்றது. அதுவும் மும்பையை 162 ரன்களுக்குள் சுருட்டி, வெற்றியைப் பெற்றது சென்னை. இன்று மீண்டும் இதே சீசனில் இரு அணிகளும் மோதுகின்றன. இப்போது எப்படிக் கணிக்கப்படுகிறது என்றால், மும்பை பலம் வாய்ந்த அணியாகவும், சென்னை பலவீனமான அணியாகவும், சென்னையை எளிதாக மும்பை வீழ்த்தி விடும் என்றுமே பேசப்படுகிறது.

இரண்டு கணிப்புகளிலும் உண்மை இருக்கிறது. சீசன் தொடக்கத்தில் ரெய்னா, ஹர்பஜன் இல்லையென்றாலும், தோனி சென்னையை வெற்றியை நோக்கி வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், சூழல் மாறியது. அவரின் சில முடிவுகள் ஒரிரு போட்டிகளில் தோற்கவும் காரணமாயிற்று. அணியில் ஃபார்மில் உள்ள வீரர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்போது பிராவோவும் காயம் காரணமாக விலகி விட்டார். எனவே, அணி வலுவற்று உள்ளது என்பதே யதார்த்தம்.

மும்பையை மீண்டும் வெல்ல முடியுமா சென்னையால்? – #ipl #MIvsCSK

சென்னை 10 போட்டிகளில் ஆடி, 3 -ம் மட்டுமே வென்று ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கிறது, மும்பை அணியோ 9 போட்டிகளில் ஆடி, 7 -ல் வென்று மூன்றாம் இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றுமே வலுவாக உள்ளது மும்பை.

சென்னை தோற்றுவிடும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லையா…. இருக்கிறது.

மும்பையை முதல் போட்டியில் வீழ்த்திய அதே நபர்கள் இப்போதும் சென்னை அணியில் இருக்கிறார்கள். அவரிகளில் ஃபுல் பார்ம் அவுட்டில் இருக்கும் முரளி விஜய், கேதார் ஜாதவ் ஆகியோரை நீக்கி விடலாம். சாம் கரணை ஓப்பனிங் இறக்கிவிடும் அபாய ஆட்டத்தைக் கைவிடலாம்.

மும்பையை மீண்டும் வெல்ல முடியுமா சென்னையால்? – #ipl #MIvsCSK

ஒரு முயற்சியாக வாட்ஸனோடு ஜெகதீஷனை ஓப்பனிங் இறக்கலாம். இன்னும் பரிசோதனையில் இறங்க தோனி துணிந்தால், ருத்ராஜ் – ஜெகதீஷன் ஜோடியைக்கூட ஓப்பனிங் இறக்கி விடலாம். சீனியர் பிளேயர் ஒருவர் இருந்தே ஆக வேண்டும் என நினைத்தால் ருத்ராஜ் ஒன் டவுன் ஆட வைக்கலாம். புதியவர்கள் தங்களின் திறமையை நிருபிக்க நிச்சயம் ஆடக்கூடும்.

டூ பளஸி, ராயுடு, ஜடேஜா, தோனி, சாம்கரன் என்று பேட்டிங் ஆர்டர் வகுத்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால், தோனிக்கு முன் சாம் கரணை இறக்கி விடலாம். பவுலிங்கில் சாம் கரண், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், தாக்கூர் என்பதே சமாளித்துவிடக்கூடியதுதான்.

மும்பையை மீண்டும் வெல்ல முடியுமா சென்னையால்? – #ipl #MIvsCSK

அதெல்லாம் முடியாது, ஓப்பனிங் வாட்ஸன் – டூ பிளஸி, கேதார் ஜாதவ் டீமில் உண்டு. ருத்ராஜ், ஜெகதீஷன் கூல் டிரிங்ஸ் சுமப்பார்கள் என்று தோனி முடிவெடுத்தால் ‘தலைக்கீழாகத்தான் குதிப்பான் கோட்டைச் சாமி’ கவுண்டமணி கதைதான் ரிசல்ட். மேலும், இளம் வீரர்களுக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுப்பதும் அநீதிதான்.

மும்பையை மீண்டும் வெல்ல முடியுமா சென்னையால்? – #ipl #MIvsCSK

மும்பை இப்போது பலமாக இருக்கிறது. பாயிண்ட் டேபிளில் முதல் இடத்திற்குச் செல்ல இன்றைய வெற்றி உதவும் என்பதால் கடுமையான சவாலை அளிக்கும். ஆயினும், வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் சென்னை அதைவிடவும் போராடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.