பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

 

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? அது பாதுகாப்பானதா? என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு…

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. குழந்தை கருவில் இருக்கும் போது தாய்க்கு கொரோனா பரவினால், தாயுடன் சேர்ந்து குழந்தையும் அவதிப்பட்ட பல சம்பவங்கள் அரங்கேறின. சில பச்சிளங்குழந்தைகள் கொரோனாவுக்கு உயிரிழக்கவும் நேர்ந்தது. இத்தகைய கொடூரமான நோயில் இருந்து நாம் மெல்ல மீண்டு வருகிறோம். குறுகிய காலகட்டத்தில் இரண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது.

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

இப்படியிருக்கும் சூழலில் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், தடுப்பூசி பரிசோதனையின் போது கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதது தான். இதனால், மருத்துவர்களை ஆலோசித்த பிறகு அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதார நிறுவனங்கள் கூறுகின்றன.

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கொரோனா காலகட்டத்தின் போது கொரோனாவால் அதிகமாக பாதிப்புக்குள்ளானது கர்ப்பிணிகள் தான். செயற்கை சுவாசம் அளிக்கும் அளவுக்கு அவர்களின் உடல்நிலை மோசமாகிப் போனது. இதுவே, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை தயக்கம் காட்டுவதன் காரணம் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் செலுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசியில் இருக்கும் எம்-ஆர்என்ஏ, கருவுக்குள் நுழையாத் தன்மைக் கொண்டது. அதனால், தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் அவர்களுக்கு எந்த வித பக்கவிளைவுகள் இருக்காது என சில ஆய்வுகள் கூறுகின்றன.

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

கர்ப்பிணிகள் மீது பரிசோதனை செய்யாததால் அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில், தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசியை கர்ப்பிணிகளுக்கு செலுத்தி ஆய்வு நடத்தப்படவிருப்பதாகவும் சில தரவுகள் கூறுகின்றன. கொரோனா தடுப்பூசியை பாலூட்டும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் போட்டுக் கொள்ள விரும்பினால், அவர்கள் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்றும் அடிக்கடி தங்களது உடல்நிலையையும் குழந்தையின் உடல்நிலையையும் மருத்துவர்களிடம் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

அதே சமயம், தாய்ப்பாலில் ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பதால் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு சில நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன. உலக சுகாதார நிறுவனமும் இதனை தெளிவுபடுத்தியிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் மத்தியில் பரிசோதனை நடத்தாததே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று கூறியதன் பின்னணி என தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், தடுப்பூசி போட்டுக் கொள்வது தாயையும் சேயையும் பாதுகாக்கும் எ