வீட்டிலும் செய்யலாம் ‘கடப்பா’ சாம்பார் !

 

வீட்டிலும் செய்யலாம் ‘கடப்பா’ சாம்பார் !

கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானது ‘கடப்பா’ சாம்பார். இந்த சாம்பாரை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். கும்பகோணத்தில் உள்ள ஒரு சில உணவகங்களில் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே ‘கடப்பா’ கிடைக்கும். அதற்காகவே அந்த நாளைத் தேர்வுசெய்து உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும் பிரியர்கள் உண்டு.
நீங்கள் இந்த கடப்பா சாம்பாரை சுவைத்ததுண்டா? இல்லாவிட்டால்..இதோ…
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு-1/4 கப்,
உருளைக்கிழங்கு-2(வேக வைத்தது) பச்சைப் பட்டாணி-100 கிராம்(வேக வைத்தது),

வீட்டிலும் செய்யலாம் ‘கடப்பா’ சாம்பார் !


பெரிய வெங்காயம்-1(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி-சிறிது,உப்பு-தேவையான அளவு,
அரைப்பதற்கு…
துருவிய தேங்காய்-1/4கப்,
பூண்டு-4 பற்கள்,
இஞ்சி-சிறிது,
பச்சை மிளகாய்-1,
சோம்பு 1/2 டீஸ்பூன்,
தாளிப்பதற்கு…எண்ணெய்-2டீஸ்பூன்,
கடுகு-1 டீஸ்பூன்,பட்டை-1/4 இன்ச்,
கிராம்பு-2,
பிரியாணி இலை-1,
கறிவேப்பிலை-சிறிது

வீட்டிலும் செய்யலாம் ‘கடப்பா’ சாம்பார் !

செய்முறை:முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கி மசித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலும் செய்யலாம் ‘கடப்பா’ சாம்பார் !


பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு பிரட்டி விட வேண்டும்.அதில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், கும்பகோணம் கடப்பா சாம்பார் ரெடி!!

  • இர.போஸ்