மூக்கில் எலுமிச்சை சாறை ஊற்றினால் கொரோனா தொற்று குணமடையுமா?

 

மூக்கில் எலுமிச்சை சாறை ஊற்றினால் கொரோனா தொற்று குணமடையுமா?

கொரோனா வைரஸ் ஒரு புறம் வேகமாகப் பரவிக் கொண்டிருக்க, மறுபுறம் அதற்கு மருந்து சொல்கிறேன் என்ற பெயரில் போலிகளின் வதந்திகளும் பரவி மக்களின் உயிர்களைக் காவு வாங்குகின்றன. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கியவுடன் இவர்களின் வதந்தியும் சேர்த்து பரவுகிறது. சித்தா, ஆயுர்வேதா என பாரம்பரிய மருத்துவ முறைகளை முன்னிறுத்தி போலிகள் பரப்பும் வதந்திகளை மக்கள் உண்மை என்றே நம்புகின்றனர்.

மூக்கில் எலுமிச்சை சாறை ஊற்றினால் கொரோனா தொற்று குணமடையுமா?

நம்புவதோடு மட்டுமல்லாமல் அதைப் பரிசோதனை செய்தும் பார்க்கிறார்கள். தற்போது “எலுமிச்சை தெரபி” என்ற பெயரில் ஒரு போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. அதைப் பரப்பியவர் வேறு யாரும் அல்ல பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி விஜய் சங்கேஸ்வர் என்பவர் தான். எலுமிச்சை சாறின் சில துளிகளை மூக்கினுள் விட்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும் என்றும், ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்றும் ஒருவர் சொல்லும் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

மூக்கில் எலுமிச்சை சாறை ஊற்றினால் கொரோனா தொற்று குணமடையுமா?

அந்த வீடியோவைப் பார்த்து மூக்கினுள் எலுமிச்சை சாறை விட்ட கர்நாடகா ஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார். இது பெரும் சர்ச்சையானது. இச்சூழலில் உண்மையிலேயே இதைச் செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுமா என்ற கேள்விக்கு மத்திய அரசின் செய்தி நிறுவனம் (PIB) முழுமையாக மறுத்திருக்கிறது. மூக்கினுள் எலுமிச்சை சாறை விட்டால் கொரோனா குணமாகும் என்றோ, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றோ எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் கூறவில்லை. ஆபத்தான இந்தக் காரியத்தில் யாரும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

இதேபோல Aspidosperma Q 20 என்ற ஆயுர்வேத மருந்தை எடுத்துக்கொண்டால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்ற தகவல் பரவியது. இதனை நிராகரித்துள்ள மத்திய ஆயுஸ் அமைச்சகம், இதுபோன்று தவறான தகவல்களைப் பரப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.