’இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க’ பொங்கல் பணத்துடன் நோட்டீஸ் – அதிர்ச்சி வீடியோ

 

’இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க’ பொங்கல் பணத்துடன் நோட்டீஸ் – அதிர்ச்சி வீடியோ

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. பொங்கல் பரிசாக தமிழ்நாடு அரசு சார்பில் 2,500 ரூபாய் பணமும், ஒரு முழு கரும்பு, அரிசி, முந்திரி, திராட்சை உள்ளிட்டவற்றைக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான டோக்கனில் அதிமுக தலைவர்கள், பொறுப்பாளர்கள் படங்கள் அச்சிட்டு இருப்பதாகவும், ரேஷன் கடை வாசலில் அதிமுக கட்சி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் திமுக நீதிமன்றத்தை நாடியது.

அரசுத் தரப்பில் கூறப்பட்ட வாதம் என்பது சிலர் ஆர்வக்கோளாறாக அப்படி படங்களை அச்சிட்டு விட்டதாகத் தெரிவித்தது. இருதரப்பிலும் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

’இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க’ பொங்கல் பணத்துடன் நோட்டீஸ் – அதிர்ச்சி வீடியோ

தீர் விசாரணை செய்த நீதிமன்றம் பொங்கல் பரிசு டோக்கனில் எந்த ஒரு கட்சி பிரமுகர்கள் படங்கள் இருக்கக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை அளித்தது. சில இடங்களில் கடைப்பிடிக்கப்படும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதிர்ச்சியை அளிக்கிறது.

அந்த வீடியோவில், சேலம், அண்ணாநகர் பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி – நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசான 2500 ரூபாய் பணமும் பொருட்களும் கொடுக்கப்படுகின்றன.

’இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க’ பொங்கல் பணத்துடன் நோட்டீஸ் – அதிர்ச்சி வீடியோ

அந்த ரேஷன் கடைக்காரர் அளித்துவரும் மேஜையில் அதிமுகவின் நோட்டிஸ் இருக்கிறது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் படங்களும் இருக்கின்றன. மேலும், பொங்கல் பணம் வழங்கும் விவரங்களை அச்சடிதுள்ளனர். அத்தோடு இரட்டை இலை சின்ன போட்டு வாக்கு கேட்கும்விதமாக வாசகங்களும் அடங்கியிருக்கின்றன.”

இதை ஒரு நபர் வீடியோ எடுத்து, ‘ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள்… இது அரசு கொடுக்கும் பணம்… ஒரு கட்சி கொடுக்கும் பணம் அல்ல” என்று சொல்லிக்கொண்டே கேமராவைத் திருப்புகிறார். அங்கே ஒரு காவல் துறையைச் சேர்ந்த அதிகாரியும் அமர்ந்திருக்கிறார். காவல் துறை அதிகாரி முன்பே இப்படி நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

நீதி மன்ற வழிகாட்டல்கள் காற்றில் பறக்க விடுவது நியாயம்தானா என்பதே பொதுமக்களின் கேள்வி. ஆனால், இந்த வீடியோ நீதிமன்ற உத்தரவுக்கு முன்பா… பின்பா என்பது தெரியவில்லை. எப்போதாக இருந்தாலும் தார்மீக ரீதியில் இது சரியான செயல் அல்ல என்பதே சமூக ஆர்வலர்களின் பார்வையாக இருக்கிறது.