நாளை காலை நடைபெறுகிறது ஒளிப்பதிவாளர் பி.கண்ணனின் இறுதிச்சடங்கு!

 

நாளை காலை நடைபெறுகிறது ஒளிப்பதிவாளர் பி.கண்ணனின் இறுதிச்சடங்கு!

பிரபல திரைப்பட இயக்குனர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் சகோதரும் ஆன ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டு இவரின் ஒளிப்பதிவில் வெளியான ‘கடல் பூக்கள்’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்த படத்திற்காக அவருக்கு சாந்தாரம் விருது வழங்கப்பட்டது. அதே போல கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்திற்கும், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கண்களால் கைது செய்’ திரைப்படத்திற்கும் தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றார்.

நாளை காலை நடைபெறுகிறது ஒளிப்பதிவாளர் பி.கண்ணனின் இறுதிச்சடங்கு!

இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் இன்று மாலை 3 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நாளை காலை 9 முதல் 10 மணி வரை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், அச்சங்கத்தின் மூத்த உறுப்பினர் மற்றும் பொதுச் செயலாளரான கண்ணனின் மறைவுக்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.