“தம்பி என சீமான் அழைப்பது போலி” – நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

“தம்பி என சீமான் அழைப்பது போலி” – நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

சீமான் தம்பி என கூறுவது போலியானது என்று அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

“தம்பி என சீமான் அழைப்பது போலி” – நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி, ரஜினி மக்கள் மன்றத்தினர் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், அதிருப்தி அடைந்த ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன், தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர். அதேபோல் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. முன்னதாக பேராசிரியர் கல்யாண சுந்தரமும் சீமான் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

“தம்பி என சீமான் அழைப்பது போலி” – நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500 பேர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், சமத்துவம் பேசுவதும் தம்பி என சீமான் அழைப்பதும் போலியானது. சீமான் ஜனநாயகம் இன்றி செயல்படுகிறார் என்றனர். சமீபத்தில் செய்தியாளர்கள் மத்தியில் சீமானிடம் நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ராஜுவும், கல்யாணும் நான் அனுப்பிய உளவாளிகள் என்றார்.