Advertisementஉடலுறவின்போது திருட்டுத்தனமாக ஆணுறையை கழற்றினால் குற்றம் - அமலாகும் புதிய சட்டம்!உடலுறவின்போது திருட்டுத்தனமாக ஆணுறையை கழற்றினால் குற்றம் - அமலாகும் புதிய சட்டம்!
Home உலகம் உடலுறவின்போது திருட்டுத்தனமாக ஆணுறையை கழற்றினால் குற்றம் - அமலாகும் புதிய சட்டம்!

உடலுறவின்போது திருட்டுத்தனமாக ஆணுறையை கழற்றினால் குற்றம் – அமலாகும் புதிய சட்டம்!

உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்று. அதில் கிடைக்கும் இன்பம் என்பதும் பொதுவானதே. இருவருக்கும் சம்மதம் என்ற வஸ்து இதற்கு நடுவில் இருக்கிறது. சம்மதம் இல்லாத உடலுறவு தான் பாலியல் குற்றமாகிறது. அந்த வகையில் உடலுறவில் சம்மதம் என்பது இருவரிடமிருந்தும் தன்னார்வமாக வெளிப்பட வேண்டும். சிலருக்கு ஆணுறை பயன்படுத்தாமல் உடலுறவு மேற்கொள்வது பிடிக்கும்; குறிப்பாக ஆண்களுக்கு.

உடலுறவின்போது திருட்டுத்தனமாக ஆணுறையை கழற்றினால் குற்றம் - அமலாகும் புதிய சட்டம்!
Removing a Condom Without Consent Soon to Become Illegal in California, Will Others Follow Suit?

ஆனால் பெரும்பான்மையான பெண்களுக்கு கருத்தரிப்பின் அச்சம் காரணமாக ஆணுறையை விரும்புவார்கள். அந்த வகை பெண்களிடம் முதலில் ஆணுறை பயன்படுத்துவதாக ஒப்புதல் வாங்கிகொண்டு, பாதியில் திருட்டுத்தனமாக (STEALTHING) அதனைக் கழற்றுவது குற்றம் என்கிறது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமலாகவிருக்கும் புதிய சட்டம். இதனால் உடலளவிலும் மனதளவிலும் பெண்களின் உணர்வுகள் காயப்படுத்தப்படுவதாகவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Image result for Cristina Garcia

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீடு கோரவும் சட்டம் அங்கீகரிக்கிறது. தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாண ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் இந்த புதிய சட்டத்தைக் கொண்டுவந்த முதல் மாகாணாம் என்ற பெருமையை கலிபோர்னியா பெறும். இச்சட்டம் வருவதற்கு மூலகர்த்தாவாக செயல்பட்டவர் ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினர் கிறிஸ்டினா கார்சியா.

இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “2017ஆம் ஆண்டிலிருந்து பெண்களும் சில ஆண்களும் ஆணுறையைக் கழற்றும் திருட்டுத்தனத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கு எதிராகச் செயலாற்றிவருகிறேன். இந்த அவமானகரமான செயலைச் செய்பவர்கள் பொறுப்பேற்கும் வரை நான் இச்சட்டத்தை நிறைவேற்றாமல் விட மாட்டேன். ஆணுறையை இடையில் எப்படி கழற்றுவது என்பது குறித்து சமூக வலைதளங்களில் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். அது அருவருக்கத்தக்க ஒன்று. ஒருவரின் அதீத இன்பத்திற்காக மற்றொருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” என்றார் ஆவேசமாக.

உடலுறவின்போது திருட்டுத்தனமாக ஆணுறையை கழற்றினால் குற்றம் - அமலாகும் புதிய சட்டம்!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.ஈரோடு...

“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா?; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌. மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக்...
TopTamilNews