கயத்தாறு அருகே இரட்டை தலைகளுடன் பிறந்த கன்றுகுட்டி… வியப்புடன் பார்வையிடும் மக்கள்…

கயத்தாறு அருகே இரட்டை தலைகளுடன் பிறந்த கன்றுகுட்டி… வியப்புடன் பார்வையிடும் மக்கள்…

தூத்துக்குடி

கயத்தாறு அருகே பசுமாடு ஒன்று இரண்டு தலைகள் உடைய கன்றுகுட்டியை ஈன்ற சம்பவம், பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த வடக்கு இழந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை. விவசாயி. இவர் வீட்டில் வளர்த்து வரும் பசு மாடு ஒன்று, சில நாட்களுக்கு முன்பு மூன்றாவது முறையாக ஆண் கன்று ஈன்றது. செவலை நிறத்திலான அந்த கன்று குட்டிக்கு இரு தலைகள் ஒட்டியவாறு இருந்தது.

கயத்தாறு அருகே இரட்டை தலைகளுடன் பிறந்த கன்றுகுட்டி… வியப்புடன் பார்வையிடும் மக்கள்…

இதனால் அய்யாத்துரை குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த, கயத்தாறு கால்நடை துறை மருத்துவர்கள், பசு மற்றும் கன்றுகுட்டியை நேரில் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில், தாய் பசு மற்றும் கன்று ஆகியவை நலமுடன் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இரட்டை தலைகளுடன் கன்றுகுட்டி பிறந்துள்ள செய்தியை அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து அதனை பார்வையிட்டு செல்கின்றனர்.