இன்று ஜாமீன் கிடைக்குமா?.. பதைபதைப்பில் மம்தா கட்சி தலைவர்கள்.. சூடு பிடிக்கும் நாரதா டேப் வழக்கு

 

இன்று ஜாமீன் கிடைக்குமா?.. பதைபதைப்பில் மம்தா கட்சி தலைவர்கள்.. சூடு பிடிக்கும் நாரதா டேப் வழக்கு

நாரதா டேப் வழக்கில் கைதான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உள்பட 4 பேரின் ஜாமீனுக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது

மேற்கு வங்கத்தில் நாரதா நியூஸ் இணையதளம் கடந்த 2014ம் ஆண்டில் ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தி போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக பணம் பெற்ற காட்சிகளை வீடியோ எடுத்தது. இருப்பினும் 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகத்தான் அந்த வீடியோ வெளியானது. நாரதா டேப் (வீடியோ) வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இன்று ஜாமீன் கிடைக்குமா?.. பதைபதைப்பில் மம்தா கட்சி தலைவர்கள்.. சூடு பிடிக்கும் நாரதா டேப் வழக்கு
சி.பி.ஐ.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று இந்த வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா மற்றும் திரிணாமுல் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இருப்பினும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அவர்களுக்கு பெயில் வழங்கியது. ஆனால் கல்கத்தா உயர் நீதிமன்றம் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கிய பெயில் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்று ஜாமீன் கிடைக்குமா?.. பதைபதைப்பில் மம்தா கட்சி தலைவர்கள்.. சூடு பிடிக்கும் நாரதா டேப் வழக்கு
கல்கத்தா உயர் நீதிமன்றம்

பெயில் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கைதான 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை நாளை (இன்று) மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தது. இதனால் இன்றாவது ஜாமீன் கிடைக்குமா என்று திரிணாமுல் காங்கிரஸ் பதைபதைப்பில் உள்ளனர். இதற்கிடையே நாரதா டேப் வழக்கை மேற்கு வங்கத்துக்கு வெளியே நடத்த அனுமதிக்கோரி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.