சத்தீஸ்கரில் நக்சலைட்கள் வெடிகுண்டு தாக்குதல் – ஆயுதப்படை போலீசார் படுகாயம்

 

சத்தீஸ்கரில் நக்சலைட்கள் வெடிகுண்டு தாக்குதல் – ஆயுதப்படை போலீசார் படுகாயம்

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆயுதப்படை போலீசார் ஒருவர் படுகாயமடைந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயன்பூர் மாவட்டம் ஆர்ச்சா வனப்பகுதியில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக இன்று அதிகாலை 3 மணியளவில் ஆயுதப் படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்கள் ஆயுதப் படை போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பதிலடி தரும் விதமாக நக்சலைட்கள் மீது ஆயுதப் படை போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ரிமோட் கன்டோரல் மூலம் நக்சலைட்டுகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இந்த திடீர் வெடிகுண்டு தாக்குதலில் ஆயுதப்படை போலீசார் ராகுல் சலாக் என்பவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அவர் 350 கி.மீ தொலைவில் இருந்த ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.