கற்றாழையில் ஆரோக்கிய பானம் – விம்சிகல் நிறுவனம் அறிவிப்பு

 

கற்றாழையில் ஆரோக்கிய பானம் – விம்சிகல் நிறுவனம் அறிவிப்பு

இந்திய சந்தையில் இயற்கை சார்ந்த புதிய வகை ஆரோக்கிய பானம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களை Whimsical நிறுவனத்தின் Healthy
habits எனும் பெயரில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

கற்றாழையில் ஆரோக்கிய பானம் – விம்சிகல் நிறுவனம் அறிவிப்பு
கற்றாழையில் ஆரோக்கிய பானம் – விம்சிகல் நிறுவனம் அறிவிப்பு

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகர், எங்களது நிறுவனத்தின் சார்பாக விவசாயிகள் பயனடையும் வகையில் தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி சாலைகளில் இருந்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய உள்ளதாகவும், முழுமையான கற்றாழை மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு தயார் செய்ய உள்ள இந்த வகை பொருட்கள் விஷன் 2025ல் மக்களால் அதிகம் விரும்பும் பிராண்டாக மாற்ற உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதேபோல கற்றாழை கொண்டு தயிர், ஹேர் டை, சோப்பு, ஷாம்பூ, அழகு க்ரீம்கள் என முப்பதிற்கும் மேற்பட்ட முழுமையான இந்திய தயாரிப்பு சாதனங்களை அறிமுகபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கற்றாழையில் ஆரோக்கிய பானம் – விம்சிகல் நிறுவனம் அறிவிப்பு