சிஏஏ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

சிஏஏ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிஏஏ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2 ஆம் நாளான இன்று தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது. எம்எல்ஏ உதயசூரியன் இதை தொடங்கி வைத்தார். பிரபல எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், முன்னாள் எம்எல்ஏ காளியண்ணன் ஆகியோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிஏஏ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூலையில் நடக்கும் பட்ஜெட் தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் ஆளுநர் உரை யாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.உழவர்களின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.