“CAA -வுக்கு ஆதரவு தெரிவிச்சதுனால தான் எங்களுக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைச்சது” : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு!

 

“CAA -வுக்கு ஆதரவு தெரிவிச்சதுனால தான் எங்களுக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைச்சது” : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு!

மோடி அரசுடன் இணக்கமாக இருப்பது  தான் காரணம்.இதை சொன்னா நாங்க  ஜால்ரா அடித்ததனால் தான் கிடைத்தது என்கிறார்கள்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்த விளக்கக் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ‘மரியாதைக்குரிய மோடி அவர்கள், இவர்கள் தான் அசாமுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டி அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு கொடுக்க தான் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு பாதிப்பு?

ttn

நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததால் தான் தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் கிடைத்துள்ளது. அதற்கு மோடி அரசுடன் இணக்கமாக இருப்பது  தான் காரணம்.இதை சொன்னா நாங்க  ஜால்ரா அடித்ததனால் தான் கிடைத்தது என்கிறார்கள்.

tt

தமிழகத்திற்கு சீன அதிபர், பிரதமர் மோடி வந்தபோது இரண்டு பேரும் எங்கள் ஆட்சியைப் பார்த்து  மக்களை அன்பாக பார்த்துக்கொள்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதை போல ஒரு மாநிலத்தை பார்க்கவில்லை என்கிறார்கள்.  இப்பவும் பிரச்சனை நடக்குது. எங்காவது குண்டு காயம் ஏற்பட்டு, செத்தாங்க போனாங்கன்னு ஏதாவது வருதா போகுதா? கற்பழிச்சான் போனான் வந்தான்னு சொல்றது  அது காலங்காலமாக நடக்கிறது. 5 லட்சத்தை 10 கோடியாக மாற்றுவது ரெகுலரா நடக்குது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.