நிவர் புயல் காரணமாக சி.ஏ. தேர்வுகள் ரத்து!

நிவர் புயல் காரணமாக  சி.ஏ. தேர்வுகள் ரத்து!

நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெற இருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நிவர் புயல் காரணமாக  சி.ஏ. தேர்வுகள் ரத்து!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிமீ தொலைவில் உள்ள நிவர் புயல் 4 கிமீ வேகத்திலிருந்து 5 கிமீ அதிகரித்து வருகிறது. இந்த புயலானது நாளை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக  சி.ஏ. தேர்வுகள் ரத்து!

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறும் என என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் பேருந்து சேவை, ரயில் சேவை போன்றவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக  சி.ஏ. தேர்வுகள் ரத்து!

அத்துடன் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.