’கொரோனா தடுப்பூசி வருவதற்குள்…’ உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை

 

’கொரோனா தடுப்பூசி வருவதற்குள்…’ உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை

உலகம் முழுவதுமே கொரோனா பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சில நாடுகள் மட்டுமே முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன, மற்றவை கொரோனாவில் கோரத்தாண்டவத்தில் சிக்கித் தவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 27 லட்சத்து  65 ஆயிரத்து 204 பேர்.    

’கொரோனா தடுப்பூசி வருவதற்குள்…’ உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 41 லட்சத்து 83 ஆயிரத்து 346 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 463 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். 

’கொரோனா தடுப்பூசி வருவதற்குள்…’ உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் 5 எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

ஆனபோதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் 5 பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

’கொரோனா தடுப்பூசி வருவதற்குள்…’ உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை

ஆனால், கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வருவதற்குள் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதைபோல இரு மடங்காகி விடும் என உலக சுகாதார மையத்தின் திட்ட இயக்குநர் மிக் ரியான் கூறியுள்ளார்.

முடிந்தளவு கொரோனா தடுப்பு மருந்தைப் பரவலாகக் கொண்டுச் செல்வதில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே அவரின் கூற்றுக்கு சரியான விளக்கமாக அமையும்.