கந்தன் கருணையால்,உறவுகள் மேம்படும்- காரியங்கள் சித்தியாகும் !

 

கந்தன் கருணையால்,உறவுகள் மேம்படும்- காரியங்கள் சித்தியாகும் !

சிவபெருமானை நெருப்பின் வடிவமாகவும், சக்தியை நீரின் வடிவமாகவும் கூறுவார்கள். சிவலிங்கத்தில் ஆவுடையாரின் வடிவம் பரந்த நீரையும், அதன் நடுவே ஓங்கி உயர்ந்துள்ள லிங்க பாணம் நெருப்பையும் குறிக்கின்றன. நீரும் நெருப்புமே உலகத் தோற்றத்துக்கு ஆதாரம். அந்த வகையில், சக்தி வேலுடன் ஆறுமுக சிவமாய் அருளும் கந்தனும் உலகின் உயிர்நாடியாய் விளங்குகிறான்.
ரத்தம், யுத்தம், சகோதர உறவு ஆகியவற்றுக்கு உரித்தானவர் செவ்வாய் (அங்காரகன்). அவருக்கு அதிபதி கந்தவேள். அவரை வழிபட உறவுகள் மேம்படும், சகல காரியங்களிலும் ஜெயம் உண்டாகும், வந்த வினைகளும் வருகின்ற வல்வினைகளும் விலகியோடும்.

கந்தன் கருணையால்,உறவுகள் மேம்படும்- காரியங்கள் சித்தியாகும் !

கந்தப்பெருமானுக்கு உகந்த விரதங்கள்!

அன்புக்கும் அருளுக்கும் பஞ்சம்வைக்காத கந்தப் பெருமானுக்கு முன்று விரதங்கள் மிகவும் உகந்தவையாகும். அவை, வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் ஆகும். வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளிலும், நட்சத்திர விரதம் கார்த்திகை நட்சத்திரத்திலும், திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது. செவ்வாய் கிழமைகளில் கந்தப்பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்தது, சக்தியானது.
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் இவ்விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய்க்கிழமை காலையில் குளித்து முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும்.

கந்தன் கருணையால்,உறவுகள் மேம்படும்- காரியங்கள் சித்தியாகும் !

இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.

சண்முக காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
ஸ்ரீசுப்ரமணிய கலம்பகம்
வேலவனே விக்கிரமாதிபனே விடையோனளித்த
பாலகனே புவிப்பண்டிதனே பணிந்தோர்களனு
கூலவனே திருப்போரூர் குமர குருவெனவே
நுலவனே அருள்செய்தற் கினிவிழி நோக்குவையே
இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து செவ்வரளி மலர்களால் பூஜை செய்யவும். பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்யவும்.
முருகனுக்கு உகந்த நாட்களில் ஸ்ரீகந்தபுராணத்தை படித்தால் கந்தனின் திருவருள் கிடைக்கும்.

கந்தன் கருணையால்,உறவுகள் மேம்படும்- காரியங்கள் சித்தியாகும் !

முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகனுக்கு நெய் தீபம் ஏற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்யவேண்டும்.
செவ்வாய் தோஷத்தின் கெடுபலன்கள் குறையவும் புனர் பூசம், பூசம், கிருத்திகை, விசாகம் மற்றும் ஆயில்ய நட்சத்திரக்காரர்களும் முருகனை வழிபட்டால், வாழ்க்கை வரமாகும். -வித்யா ராஜா