காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையம்

காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையம்

நாடு முழுவதும் 56 பேரவை தொகுதிகள் காலியாக இருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சில இடங்களில் இடைத்தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் நிலவுகிறது. அதனால் இன்று காலை காலியாக உள்ள பேரவை தொகுதிகள் மற்றும் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் குறித்து டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலை இந்தாண்டு இறுதிக்குள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.