10 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆளும் கட்சிகளின் ஆதிக்கம்

 

10 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆளும் கட்சிகளின் ஆதிக்கம்

10 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் கட்சியை வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் சுஜன்கர் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனோஜ் குமார், பா.ஜ.க.வின் கேமா ராமை 35,611 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ராஜ்சமண்ட் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீப்தி கிரண் மகேஸ்வரி 5,310 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் தன்சுக் போஹாராவை தோற்கடித்தார். சஹாரா சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரசின் காயத்ரி தேவி, ரத்தன் லால் ஜாட்டை 42,200 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

10 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆளும் கட்சிகளின் ஆதிக்கம்
டி.ஆர்.எஸ்.

தெலங்கானாவில் நாகர்ஜூனா சாகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் நோமுலா பகத், காங்கிரசின் குண்டுரு ஜனாரெட்டியை 18,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உத்தரகாண்டில் சால்ட் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் மகேஷ் ஜீனா, காங்கிரஸ் வேட்பாளர் கங்கா பஞ்சோலியை 4,697 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாகலாந்தில் நோக்சன் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் முடிவு தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் எச்.சுபா சாங்கிற்கு ஆதரவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆளும் கட்சிகளின் ஆதிக்கம்
பா.ஜ.க.

மிசோரத்தில் செர்ச்சிப் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சோரம் மக்கள் இயக்கத்தின் லால்டுஹோமா 2,950 வாக்குகள் வித்தியாசத்தில் மிசா தேசிய முன்னணியின் வன்லால்சாவ்மாவை வீழ்த்தினார். மத்திய பிரதேசத்தில் தாமோ சட்டப்பேரவை தொகுதியில் எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த அஜய் குமார் வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிராவின் பான்தாபுர் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் சமதன் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் மோர்வா ஹதாப் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் சுதார் நிமிஷாபென் மன்ஹர்சிங், காங்கிரசின் கட்டாரா சுரேஷ்பாய் சாகன்பாயை 45,649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

10 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆளும் கட்சிகளின் ஆதிக்கம்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

ஜார்க்கண்டில் மதுபூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் கங்கா நாராயண் சிங்கை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹபீசுல் ஹசன் 5,247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் பசவகல்யாண் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் ஷாரனு சலகர் காங்கிரசின் மாலா பி நாராயணராவை 20,629 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மாஸ்கி சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பிரதாப் கவுடா பாட்டீல் காங்கிரஸ் வேட்பாளரை காட்டிலும் 30,606 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். இந்த தொகுதியின் முடிவை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.