3 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது? : தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹு விளக்கம்

 

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது? : தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹு விளக்கம்

திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவையடுத்து அந்த தொகுதிகள் அனைத்தும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது? : தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹு விளக்கம்

அடுத்த ஆண்டு மே 25 ஆம் தேதியுடன் இந்த ஆட்சி முடிகிறது என்பதால் 6 மாத காலத்திற்குள் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளதாகவும், விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் திருவல்லிகேணி ஆகிய 3 தொகுதிகளிலும் இடைதேர்தல் நடத்துவது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹு தகவல் கொடுத்துள்ளார்.

அதாவது, 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இடைத்தேர்தல் தேதி முடிவு செய்யப்படவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.