இன்னும் 10 வருஷத்துல 89 கோடி பேர் பசி கொடுமையால் பாதிக்கப்படுபவர்.. எச்சரிக்கும் ஐ.நா. அமைப்பு

இன்னும் 10 வருஷத்துல 89 கோடி பேர் பசி கொடுமையால் பாதிக்கப்படுபவர்.. எச்சரிக்கும் ஐ.நா. அமைப்பு

இன்றைய நவீன உலகத்தில் உணவை சாப்பிட நேரம் கிடைக்காமல் ஒரு கூட்டம் வேலை வேலையென ஒடுகிறது. அதேசமயம் ஒரு வேளை உணவு கிடைக்காமல் பல கோடி பேர் பசியால் ஒரு பக்கம் வாடுகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், உலகில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவலை ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்னும் 10 வருஷத்துல 89 கோடி பேர் பசி கொடுமையால் பாதிக்கப்படுபவர்.. எச்சரிக்கும் ஐ.நா. அமைப்பு

ஐ.நா. அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்த ஆண்டு ஏற்கனவே மோசமடைந்து வரும் போக்குகளை அதிகரித்து வருவதால், உலகில் தற்போது ஒன்பது பேரில் ஒருவர் பசியுடன் இருக்கிறார். உலகில் 69 கோடி பேர் அல்லது உலகின் மொத்த மக்கள் தொகையில் 8.9 சதவீதம் பேர் பசியால் தவித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் உலகில் உணவு இல்லாமல் அல்லது பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 6 கோடி அதிகரித்தது. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 1 கோடி உயர்ந்துள்ளது.

இன்னும் 10 வருஷத்துல 89 கோடி பேர் பசி கொடுமையால் பாதிக்கப்படுபவர்.. எச்சரிக்கும் ஐ.நா. அமைப்பு

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, 2030ம் ஆண்டுக்குள் பசியை ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றால் அது சாத்தியமில்லை. 2030ம் ஆண்டுக்குள் உலகின் மொத்த மக்கள்தொகையில் 9.8 சதவீதம் பேர் அல்லது 89 கோடி பேர் பசியால் பாதிக்கப்படுபவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.