“பின் சீட்டுல இருமரவன பார்த்தா பயமா இருக்கே” -பதட்டத்தோடு பஸ்ஸில் போகும் பயணிகள்

“பின் சீட்டுல  இருமரவன பார்த்தா பயமா இருக்கே” -பதட்டத்தோடு பஸ்ஸில் போகும் பயணிகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் இன்று பேருந்து சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் கண்டக்டர்கள் கவலையடைந்துள்ளனர் .

“பின் சீட்டுல  இருமரவன பார்த்தா பயமா இருக்கே” -பதட்டத்தோடு பஸ்ஸில் போகும் பயணிகள்

தமிழகத்தில் ஐந்து மாத ஊரடங்குக்கு பிறகு இன்று அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அனைத்து பேருந்துக்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது .தமிழகம் முழுவதும் 20000 பேருந்துகளும் ,அதில் சென்னையில் மட்டும் 3300 பேருந்துகளும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முக கவசம் அணிந்தும் ,சானிடைசர் கொண்டு கைகளை கழுவிய பிறகும் ,பின் பக்கம் ஏறி ,முன்பக்கம் இறங்குமாறு பயணம் செய்ய கூறினார்கள் .
ஒரு பேருந்துக்கு 24 பயணிகளோடும் ,ஒரு சீட்டில் ஒருவர் மட்டுமே பயணிக்குமாறும் ,பேருந்தில் நின்றுகொண்டோ ,படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டோ பயணம் செய்யக்கூடாது என்றும் ,கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன .இந்நிலையில் வைரஸ் பரவும் என்ற பயத்தால் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது .மேலும் மாவட்டம் மாவட்டம் போக அனுமதித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அவைகள் இயக்கப்படவில்லை .தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலையிலும் அரசு பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருப்பது கவலையளிப்பதாக நடத்துனர்கள் கூறினார்கள் .

“பின் சீட்டுல  இருமரவன பார்த்தா பயமா இருக்கே” -பதட்டத்தோடு பஸ்ஸில் போகும் பயணிகள்