“திமுகவை கண்டு வணிகர்கள் அச்சப்படுகின்றனர்” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

 

“திமுகவை கண்டு வணிகர்கள் அச்சப்படுகின்றனர்” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்

திமுகவினர் வணிகர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும், இதனால் அவர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சீனிவாசன், கட்சியினர் இடையே உரையாற்றினார். அப்போது, திமுகவினர் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் பண வசூலில் ஈடுபட்டதாகவும், இதனால் பொதுமக்களும், வணிகர்களும் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், திமுகவினரை போல அதிமுகவினர் கடைகளில் வசூல் செய்ததை நிரூபித்தால் தான் பதவியை விட்டு விலக தயாராக உள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து ஐ.பெரியசாமி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தாயாரா? என்றும் சவால் விடுத்தார்.

“திமுகவை கண்டு வணிகர்கள் அச்சப்படுகின்றனர்” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு


தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அரசு சார்பில் பொங்கலுக்கு ரேஷனில் 2500 ரூபாய் ரொக்கம் வழங்கியதாகவும், ஆனால் அதற்கு தாங்கள் தான் காரணம் என்பது போல திமுகவினர் பெருமை பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் ஊரான் வீட்டு குழந்தையை தன் மகன் என திமுகவினர் கொண்டாடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.