சீன அதிபரை விமர்சித்த தொழிலதிபருக்கு ஊழல் வழக்கில் 18 ஆண்டு ஜெயில்!

 

சீன அதிபரை விமர்சித்த தொழிலதிபருக்கு ஊழல் வழக்கில் 18 ஆண்டு ஜெயில்!

சீனாவின் வூகான் நகரில்தான் கடந்த ஆண்டு டிசம்பரில், முதன்முதலாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு நாடாகப் பரவி இன்று உலகம் முழுவதும் அச்சம் தரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

வூகான் இறைச்சி சந்தையில் கொரோனா வைரஸ் உருவானதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அது ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கபட்டதாக ஆய்வாளர் ஒருவர் கூறிவருகிறார்.

சீன அதிபரை விமர்சித்த தொழிலதிபருக்கு ஊழல் வழக்கில் 18 ஆண்டு ஜெயில்!
கொரோனா வைரஸ்

இன்றைய நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 14 லட்சத்து  85 ஆயிரத்து 777 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 31 லட்சத்து 13 ஆயிரத்து 726 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 69 ஆயிரத்து 301 பேர்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,02,750 பேர்.

சீன அதிபரை விமர்சித்த தொழிலதிபருக்கு ஊழல் வழக்கில் 18 ஆண்டு ஜெயில்!

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 70,46,216 பேரும், இந்தியாவில் 55,62,663 பேரும், பிரேசில் நாட்டில்  45,60,083 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சீனாவில் படிப்படையாக கொரோனா பரவல் குறைந்து விட்டது. சீனாவில் உள்ள தொழிலதிபர் ரென் சிகியாங், ஐந்து மாதங்களுக்கு முன் கட்டுரை ஒன்றை எழுதினார்.

சீன அதிபரை விமர்சித்த தொழிலதிபருக்கு ஊழல் வழக்கில் 18 ஆண்டு ஜெயில்!
Xi Jinping, China President

அக்கட்டுரையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கவனமாகச் செயல்பட வில்லை என்று கடும் குற்றச்சாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அக்கட்டுரை சீனாவில் கடும் சூறாவளியைக் கிளம்பியது. அதனால், அந்தத் தொழிலதிபர் தலைமறைவானார்.

உடனே சீன அரசு தொழிலதிபர் ரென் சிகியாங் மீது, அவர் ஏற்கெனவே பதவி வகித்ததில் 128 கோடி முறைகேடு செய்ததாகக் கூறியுள்ளது.  பல கோடி ரூபாய் அபராதத்துடன் 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.