4 பேருக்காக விமானத்தின் 180 இருக்கைகளையும் முன்பதிவு செய்த தொழிலதிபர்

வெறும் 4 பேருக்காக விமானத்தின் 180 இருக்கைகளையும் தொழிலதிபர் ஒருவர் முன்பதிவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லி: வெறும் 4 பேருக்காக விமானத்தின் 180 இருக்கைகளையும் தொழிலதிபர் ஒருவர் முன்பதிவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

போபாலை சேர்ந்த பணக்கார தொழிலதிபர் ஒருவர் தனது மூன்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேலைக்காரியை டெல்லிக்கு அனுப்ப, தனியார் நிறுவனத்தின் ஏ-320 விமானம் ஒன்றின் 180 இருக்கைகளையும் முன்பதிவு செய்தார். அதாவது மொத்த விமானத்தையும் வாடகைக்கு எடுத்தார். கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது. இதற்காக அவர் சுமார் ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கித் தவித்த தனது மகள், இரண்டு குழந்தைகள் மற்றும் வேலைக்காரி ஆகியோரை டெல்லிக்கு அனுப்ப தொழிலதிபர் இவ்வாறு செய்தார். அதனால் கடந்த திங்களன்று டெல்லியில் இருந்து விமான குழுவினருடன் மட்டுமே போபாலுக்கு வந்து தரையிறங்கிய அந்த விமானம், நான்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பிச் சென்றது.

Most Popular

நான் இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.. முடிவு வந்தது- தமிழிசை ட்வீட்

தெலங்கானா மாநிலத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமாகி வீட்டுக்கு வந்து விட்டனர். தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 300 க்கும் அதிகமானோர்...

கல்லூரி தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்- ராமதாஸ்

கல்லூரி தேர்வு விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி...

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக எடுத்துச் சென்ற கொடுமை

தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் 50 வயது நபருடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் ஜூன் 27 ஆம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம்...
Open

ttn

Close