தொடரும் நஷ்டம்.. ரூ.7,132 கோடி இழப்பை சந்தித்த வோடாபோன் ஐடியா

 
வோடாபோன் ஐடியா

வோடாபோன் ஐடியா நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.7,132.3 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் ஐடியா தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் 2021 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.7,132.3 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. 2021 ஜூன் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.7,319.1 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

வோடாபோன் ஐடியா

2021 செப்டம்பர்  காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின்  ஒட்டு மொத்த வருவாய் ரூ.9,406.4 கோடியாக உள்ளது. இது 2021 ஜூன்  காலாண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனம் ஒட்டு மொத்த வருவாயாக ரூ.9,152.3 கோடி ஈட்டியிருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ஒரு வாடிக்கையாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.104-லிருந்து ரூ.109ஆக உயர்ந்துள்ளது.

வோடாபோன் ஐடியா

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, வோடாபோன் ஐடியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.42 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.10.09ஆக இருந்தது.